கோடை வெயிலுக்கு நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயிலுக்கு நுங்கு விற்பனை அமோகம்

 நாகை மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு இதமாக நுங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது. 

நாகை மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு இதமாக நுங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது.

நாகை மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு பனை நுங்கு விற்பனை அமோகம் 5 நுங்கு ரூ.20 க்கு விற்பனை நாகை மாவட்டத்தில் பனைநுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 5 நுங்கு ரூ.20-க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தின் மாநிலத்தின் மரமாக பனை மரம் விளங்குகிறது.கடும் வறட்சியான நிலப்பரப்பிலும் செழுமையாக வளரும் பனை மரத்தின் அனைத்துப் பொருள்களும் பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன் தருகின்றன.கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி,இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது.உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. 5 நுங்கு ரூ.20-க்கு விற்பனை பனை நுங்கு சீசன் தொடங்கியுள்ளது.அங்கிருந்து கொண்டு வரப்படும் பனை நுங்கு ஒன்றியத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5 நுங்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பனை நுங்கு குணாதிசயங்களை அறிந்த பொதுமக்கள் கண்டவுடன் சாப்பிடுகின்றனர்.வெளுத்து வாங்கும் வெயிலுக்கு சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும் இயற்கை பனை நுங்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் பனை நுங்கு விற்பனை நாகை மாவட்டத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags

Next Story