எலிகடிக்கு சிகிச்சை பெற்று வந்த செவிலியர் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவர்
எலிகடிக்கு சிகிச்சை பெற்றுவந்த பெண் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெண் செவிலியர் ஒருவர் கத்தியால் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் குருவம்மாள் (32). இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவரை எலி கடித்ததால் உடலில் அலர்ஜி் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை எடுத்தும் அவரது உடல் நிலை குணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story