செவிலியர் மாயம் - தந்தை போலீசில் புகார்
பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் செவிலியர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சலவைத் தொழிலாளி. இவரது மகள் திரிஷா(21). அரிமளத்தின் உறவினர் வீட்டில் தங்கி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந் தார். 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற திரிஷா மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story