தவறான சிகிச்சையால் சுயநினைவை இழந்த நர்சிங் கல்லூரி மாணவி
தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் அடுத்த லலாகொட்டாய் பகுதியை சார்ந்த தங்கராஜ் மகள் காயத்ரி தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து மருத்துவர் ராஜேஷ் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்துகிறார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, அப்பொழுது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து பிறகு சாதாரண நிலைக்கு காயத்ரி வந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர் ராஜேஷ், காயத்ரி சோதனை செய்து,சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். காயத்ரியின் உடல் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் பிரச்சனைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொழுது சுயநினைவின்றி இருந்து வருகிறார்.
இந்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமான உள்ள நிலையில் வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை. எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.