புற்றுநோயாளிகளுக்காக முடி தானம் செய்த நர்சிங் கல்லூரி மாணவிகள்

புற்றுநோயாளிகளுக்காக முடி தானம் செய்த நர்சிங் கல்லூரி மாணவிகள்

முடி தானம் வழங்கிய மாணவிகள் 

சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரியை சேர்ந்த 201 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்களது முடிகளை புற்றுநோயாளிகளுக்கு தானமாக அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரியில் முடி தானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை தொடங்கி உள்ளது. இந்த அதன்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரீனா இவன்சி தொடக்க உரையாற்றினார். சுங்கான்கடை இயற்கை குழு நலன் வாழ்வு மைய டாக்டர் ஏஞ்சலின் ஆஷா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த பிளாரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் 192 நர்சிங் மாணவிகள், 9 நர்சிங் ஆசிரியர்கள் என மொத்தம் 201 பேர் முடி தானம் செய்தனர். இவர்களில் ஒரு கர்ப்பிணி மாணவியும் அடங்குவார். இதில் குமரி மாவட்டம் 15-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13 நர்சிங் கல்லூரி நிறுவனங்கள் கலந்து கொண்டன. புற்றுநோயாளிகளுக்கு முடி தான செய்யும் இந்த நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற ஒரு சாதனை முயற்சியாக மண்டல ரீதியாக தொடங்கி உள்ளது. இதற்கான இறுதி நிகழ்வு சென்னை அப்பல்லோ காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் வருகிற எட்டாம் தேதி நடைபெறும். தானம் செய்யப்பட்ட கூந்தல்களை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Tags

Next Story