ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி- ஆட்சியர் பரிசு

ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி-  ஆட்சியர் பரிசு
X
சிறுதானிய உணவு கண்காட்சி 

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாவட்ட அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்வுப்பூர்வாக அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட கூடியது தான் இந்த நிகழ்ச்சி. உலக சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டினை பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அதன் முக்கியததுவத்தை உணர்ந்து அனுசரித்து வருகிறார்கள். சர்க்கரை அளவு குறைவாகவும், மற்ற சத்துக்கள் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களில் சிறுதானியம் ஒரு முக்கியமான பங்கு வைக்கிறது. சிறுதானியம் ஒரு மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக அமைய இருக்கிறது. வீட்டில் சமைப்பதை காட்டிலும், உணவு தயாரிப்பவர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

தற்போது மனிதர்களின் வாழ்வியல் மாற்றங்களினால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக சிறுதானிய உணவுகள் அதிகமாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதில் சந்தை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரத்ததின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை சிறுதானியத்திற்கு உள்ளது. அது கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, அதிகபட்சம் சிறுதானிய உணவுகளை சார்ந்து இருக்க வேண்டும். தற்பொழுது சாத்தூர் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக பதப்படுத்திய கோதுமை வகை உணவுகளை இரண்டு மூன்று நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ளும் அளவிற்கு உடனடி உணவுகளை தயார்செய்து விற்பனை செய்கின்றனர்.

துரித உணவுகளை நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இன்றை சூழ்நிலை உள்ளது. இரண்டு பேர் வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு ஏற்றவாறு தனது வேலைகளை காலையிலும், மாலையிலும் சுருக்கி கொள்ள உணவு தயாரிப்பதற்கான நேரத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்பதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உணவு சந்தையில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. உணவுகள் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தும் அளவிற்கு பதப்படுத்தும் உணவுகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சந்தை வாய்ப்புகள் 10 வருடங்களில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. எனவே மாறி வருகின்ற காலசூழ்நிலைக்கேற்ப மகளிர் சுய உதவிகுழுக்களான பெண்கள் உணவு பதப்படுத்துதல் மூலம் உடல் ஆரோக்கியம் கெடாமல், சத்தான உணவுகளைத் தயாரித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பதப்படுத்தல் தொழில் செய்து வருகிறது. அதிக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி நிலையம் மதுரையில் இருக்கிறது. அதிக அளவிலான தொழில் பயிற்சி வகுப்புகளை நாம் ஏற்படுத்துகிறோம். உணவுப்படுத்துதல் தொழில்நுட்ப கல்லூரி, சமுதாயவியல் கல்லூரி இருக்கிறது.

இந்த சந்தை வாய்ப்புகளை நிறைய மகளிர் சுயஉதவிக்குழுக்கள்; பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மூன்று பெண்கள் 2000-ம் சப்பாத்திகளை உடனடியாக செய்வதற்கு தேவையா உபகரணங்களை, இயந்திரங்களை பயன்படுத்தி நாம் சில உணவுகளை நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைக்கு ஏற்றவாறு உபயோக்கிக்கலாம், இது போன்று சிறுதானியத்திலும் உணவு பதப்படுத்துதல் முறை உள்ளது. நாம் இரண்டு மூன்று வாரங்கள் கெடாமல் உணவுகளை பதப்படுத்துவதற்கும் அதன் ஆரோக்கியம் குறையாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளை தயாரிப்பதற்கும் எந்த மாவுபொருட்கள் சமமாக இருக்கவேண்டும் என்ற அளவு உணவுகளை பதப்படுத்துதல் முறையில் தயாரித்து வருகின்றனர்.

எனவே அதற்கான பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தியும், தரச்சான்றிதழ்களை மகளிர்த்திடட்த்தின் வழிகாட்டுதல்களின்படியும் வழங்கி வருகிறது. எனவே, வளர்ந்து வரக்கூடிய இளம் தலைமுறையினர், குழந்தைகள், மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த சிறுதானிய உணவு முறைகளை உணவு பழக்கங்களில் சேர்த்து ஒருவளமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும், பெண்கள் சிறுதானியம் மற்றும் சிறுதானிய உற்பத்திப் பொருட்கள் சார்ந்த எதிர்கால சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story