சேத்துப்பட்டில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா

சேத்துப்பட்டில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா

உணவு திருவிழா 

சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா மற்றும் போட்டிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மகளிர் திட்டத்தின் வட்டார அளவிலான கூட்டமைப்பின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா மற்றும் போட்டிகள் நடைபெற்றது.சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் இருந்து 49 மகளிர் குழுவினர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவுகளான உளுத்தங்கஞ்சி,கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவுகள்,சீம்பால்,நவதானியங்கள் கீரை வகைகள், கிழங்கு வகைகள், இனிப்பு, காரம், காய்கறிகள், பழங்கள்,சிறுதானிய உணவுகள் போன்ற பாரம்பரிய உணவுகளை செய்து பார்வைக்கு வைத்தனர். சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன்,திமுக ஒன்றிய செயலாளர் எழில்மாறன்,சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள செந்தில்குமார்,இந்திராணி மற்றும் அலுவலக ஊழியர்கள்வ கலந்து கொண்டு பாரம்பரிய உணவுகளை ருசி பார்த்து மதிப்பீடுகள் வழங்கினர்.இதில் மகளிர் குழுவினர்கள், பொதுமக்கள்,ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story