அரக்கோணத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மேலாளர் ரமேஷை கண்டித்து சத்துணவு அமைப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எதிர் கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி கலந்துக் கொண்டு பேசிய போது, அரசு ஊழியர்கள் கோபத்தை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் விடியா திமுக அரசுக்கு தக்க பாடத்தை புகட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை செவி சாய்க்காத ஸ்டாலின் விடியா திமுக அரசின் சாம்ராஜ்யத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தரைமட்டம் ஆக்க வேண்டும் என்றும் மக்கள் மனதில் நிற்க்கும் வகையில் இப்போராட்டம் அமைந்ததாக கூறினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாண்டுரங்கன் ஒன்றிய செயலாளர்கள் பழனி பிரகாஷ் விஜயன் பிற அணி செயலாளர் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story