கோவையில் காயம் ஏற்படுத்தும் வகையில் காரில் பொருத்தபட்டுள்ள நட்டுகள்
காரில் பொருத்தப்பட்டுள்ள நட்டுகள்
கோவையில் காயம் ஏற்படுத்தும் வகையில், காரில் பொருத்தப்பட்டுள்ள நட்டுகளை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்
கோவை புரூக் பாண்ட் சாலையில் KL 69 D 4445 என்ற எண் கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சுசூகி கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் சக்கரத்தில் நட் பொருத்தும் இடத்தில் அம்பை போன்று வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.
இதனை வாகன ஓட்டி ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கார் சக்கர டயரில் படும் பட்சத்தில் மிகப் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படும் என்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story