ஓ.பன்னீர்செல்வம் 10-ந் தேதி திருச்சி வருகை

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரும் 10ம் தேதி திருச்சிக்கு வருகிறார்.
திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஆலோசனை வழங்கி பேசுகையில், வருகிற 10-ந் தேதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், பிரபாகர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்க திருச்சி மாநகருக்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் வருகிற 10-ந்தேதி திருச்சி காஜாமலையில் மாலை 4 மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் வசந்தி, மாவட்ட இணை செயலாளர் கலா, மகளிர் அணி பத்மாவதி, பகுதி செயலாளர்கள் ஏ. பி. சேகர், சுதாகர், கார்த்திகேயன், எடத்தெரு சந்திரன், சுமங்கலி சம்பத், வைத்தியநாதன், தாயார் சீனிவாசன், ராஜா முகமது மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர் அணி நடராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் பெப்சி பால்ராஜ், செங்கல் மணி, ஷாஜகான், மலைக்கோட்டை விஷ்வா, பால்ராஜ், இளநீர் ராஜேந்திரன், கிராப்பட்டி சுரேஷ், கணேசன், சந்து கடை சந்துரு, பிரதீப் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story