மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜீன் மாதம் 12 ஆம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு ஜூன் 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) மூர்த்தி, பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், தொழிலாளர் துணை ஆய்வாளர் திவாகரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story