செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
மனு அளிக்க வந்தவர்கள்
மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த தனி நபர் ஒருவரின் இடத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த இடத்தில் டவர் அமைக்கும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே இதை பரிசீலனை செய்து குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் இந்த தனியார் செல்போன் டவரை நிறுத்தி, இப்பகுதியில் இருந்து 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
Next Story