ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், வாவிப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் எங்களது பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் கிராமம் முழுவதும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு பலருக்கு விவசாய தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் எங்களது பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் மண்வளம், நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் வளம் பாதிக்கப்படும். எனவே இந்த தொழிற்சாலை அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்....

Tags

Next Story