கலவை அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மனு அளிக்க வந்த பாமகவினர், பொதுமக்கள்
ஆட்சியரிடம் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி ஊராட்சி கலவை கூட்ரோடு பகுதியில் புதியதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். புதிய மதுக்கடை அமைய உள்ள இடத்திற்கு அருகாமையில் பல ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதே போல பிரதான சாலையாக உள்ளதால் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த சாலை வழியாக செல்ல வேண்டி உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மது கடை மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகும் என்பதால் புதிய மதுக்கடை அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி மனுவை வழங்கினர்.
Tags
Next Story