ஆபாச பேச்சு - தட்டி கேட்ட வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

ஆபாச பேச்சு - தட்டி கேட்ட வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

கைது 

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் குடும்பத்தினரை ஆபாசமாக பேசியதை தட்டி கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ பால் மகன் ஜெய்கிருஷ்ணன் 22., இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார் மகன்கள் மனோஜ் குமார் 21, ராகுல் 17., உறவினரான சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவிஜயகுமார் 30., ஆகியோர் ஜெய்கிருஷ்ணனிடம் வீண் தகராறு செய்து அவரது குடும்பத்தில் உள்ள பெண்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெய்கிருஷ்ணன் ராகுலை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து ஜெய்கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். இதில் காயமடைந்த ஜெயகிருஷ்ணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அவரது தந்தை ஸ்ரீ பால் பொன்னூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து மனோஜ் குமார், விஜயகுமார் இருவரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள ராகுலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story