ஊத்தங்கரை நீதிமன்றத்தில் கருப்புத்தினம் அனுசரிப்பு!

ஊத்தங்கரை நீதிமன்றத்தில் கருப்புத்தினம் அனுசரிப்பு - வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.
ஊத்தங்கரை நீதிமன்றத்தில் கருப்புத்தினம் அனுசரிப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2009-ல் நடந்த தாக்குதலை நினைவுகூர்ந்து வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து வருகின்றனர். நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்துள்ளது. இலங்கைப் போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும் வழக்கறிஞர் களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் மட்டுமின்றி நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஒவ் வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ம் தேதியை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாகக் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரிக்கும் விதமாக பணிகளை புறக்கணித்து வருகின்றனர் இதனால் ஊத்தங்கரை நீதிமன்றத்திற்கு பல்வேறு வழக்குகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story