நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புனித வெள்ளி தினம் அனுசரிப்பு!

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புனித வெள்ளி தினம் அனுசரிப்பு!
நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
நாமக்கல் கிறிஸ்து அரசா் பேராலயத்தில் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற சிலுவை பாதம் நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா். நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. அருள்தந்தை தாமஸ் மாணிக்கம் முன்னிலையில் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அங்கிருந்த கிறிஸ்தவா்கள் இயேசுவை நினைத்து பிராா்த்தனை செய்தனா்.

Tags

Next Story