வாரச்சந்தையை ஆக்கிரமித்து வணிக வளாகம்: வலுக்கும் எதிர்ப்பு

வாரச்சந்தையை ஆக்கிரமித்து வணிக வளாகம்: வலுக்கும் எதிர்ப்பு

போச்சம்பள்ளி வாரச்சந்தையை ஆக்கிரமித்து கட்டப்படும் வணிக வளாகத்துக்கு, விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

போச்சம்பள்ளி வாரச்சந்தையை ஆக்கிரமித்து கட்டப்படும் வணிக வளாகத்துக்கு, விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போச்சம்பள்ளி வாரச் சந்தை ஆக்ரமித்து கட்டப்படும் வணிக வளாகம், விவசாயிகள், வியபாரிகள் எதிர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச் சந்தை தமிழகத்தின் இரண்டாவது பெரிய வாரச் சந்தை ஆகும். இந்த வாரச் சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுடன் விவசாய பொருட்களான பாரம்பரிய சாமை முதல் காராமணி, உளுந்து, செஞ்சோளம் மற்றும் குண்டூசி முதல் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப்பெறும் புகழ்பெற்ற வாரச் சந்தையாக திகழ்ந்து வருகிறது. போச்சம்பள்ளி வாரச் சந்தை குறித்து அரசு பாடநூல் திட்டத்தில் 9ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரச் சந்தைக்கு சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியபாரிகள் தானியம், கால்நடைகளை அதிகளவு வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் 18.ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வாரச்சந்தையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டேண்டு அமைக்க ஒரு ஏக்கர் அளவிற்கு ஆக்ரமிப்பு செய்யப்பட்டு பஸ் ஸ்டேண்டு அமைக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டிற்கும் போச்சம்பள்ளியின் வளர்ச்சிக்கும் பஸ் ஸ்டேண்டு அமைக்கப்பட்டதால் அப்போது சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வணிக கடைகளை புதுப்பித்து மேலும் சந்தையை ஆக்ரமித்து செய்வதுடன் ஏற்கனவே கட்டிருந்த வணிக கடைகளை கட்டுவதற்கு பர்கூர்B.D.O சந்தை ஆக்கிரமிப்புக்கு ஆர்டர் கொடுத்ததாக திமுக கவுன்சிலர்கள் ஷேர்மேன் பொது மக்களிடம் கூறி வருவதாக.நாங்கள் தீர்மானம் கொடுத்து சந்தையை என்ன வேணுமானாலும் செய்து கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனிப்பட்ட நபர்களுக்கு கடையை புதுப்பிக்கும் வகையில் ஈடுபட்ட போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதேபோல் ஆட்டுச்சந்தை கூடும் பகுதியில் புதியதாக ஐந்து கடைகள் கட்டி புதிய வணிக வளாகத்தை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைக்குள் இடம் இல்லாமல் மாட்டுச்சந்தை, கோழி, காய் கடைகளை பஸ் ஸ்டேண்டிலும், தர்மபுரி–திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், மேலும் சந்தை வளாகத்திற்குள் கடைகளை புதுப்பித்தும், புதிய கடைகள் அமைக்க விவசாயிகள், வியபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பர்கூர் பிடிஓ அவர்களுக்கு போன் செய்தால் போன் எடுக்கவில்லை இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு இடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story