சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

சீல் வைத்த அதிகாரிகள் 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து சீர்காழி சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

: இந்திய பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும் தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் ஜூன் 4- தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்க பட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி சீர்காழி சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சட்டமன்ற அலுவலகத்தில் வருகை புரிந்து அலுவலகத்தின் இரண்டு இரும்பு கதவுகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story