நிலக்கடலை சாகுபடியில் விதை நேர்த்தி செய்து பயன்பெற அதிகாரி தகவல்
நிலக்கடலை சாகுபடியில் விதை நேர்த்தி செய்து பயன்பெற அதிகாரி தகவல்
நிலக்கடலை சாகுபடியில் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் இன்றுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளது.இதனால் பரவலாக நிலக்கடலை விதைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். நிலக் கடலையில் விதை மற்றும் மண் மூலம் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த பயிர் எண்ணிக்கையை சராசரியாக பராமரிக்க வேண்டும். உயிரியல் பூஞ்சான கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சான மருந்தாக டிரைகோ டர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்து, பயிருக்கு கிடைக்க ரைசோ பியம் நுண்ணுயிரியால் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூஞ்சான மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த ஈாப்படுத்திற வேண்டும். விதைப்புக்கு முன் ஈரப்படுத்தி பூஞ்சானத்தை அதில் தூவி கலக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 2 கிராம் கிரா திரம் அல்லது மேன்கோசப் மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் நிழலில் காய வைத்து விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும். 1 ஹெக்டருக்கு தேவையான விதைகளை 125 மில்லி திரவ ரைசோ பியம், 125 மில்லி திரவபாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 30 நிமிடங்கள் நிழலில் காயவைத்து விதைக்க வேண்டும். அதில் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story