உளுந்து பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அதிகாரி முக்கிய தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம் என தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,உளுந்து பயிறு சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் இடு பொருள்களுக்கு அதிக செலவு செய்யாமல், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற முடி யும். பயறு வகைப் பயிர்க ளின் வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் மண்ணில் தழைச்சத்துப் பெருகி அடுத்த பருவ கால பயிர்கள் செழித்து வளர உதவுகிறது.உளுந்து ரகங்களான வம்பன் 8, வம்பன் 10 மற் றும் பாசிபயறு ரகங்களான கோ-8, வம்பன்-4 போன்ற ரகங்கள் சாகு படி செய்ய உகந்தது. அரிசி கஞ்சியுடன் 200 கிராம்ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து விதை நேர்த்தி செய்து ஏக்கருக்கு 8கிலோ வீதம் விதைக்க வேண்டும். 2 சதவீதம் டி.ஏ.பி கரைசலை பூக்கும் தருணத்திலும் 15 நாட்கள் கழித்தும்தெளிக்கவேண் டும். உளுந்து விதைப்புக்கு முன்பாக விதைகளை பரிசோதனை செய்வது சிறந்தது.

தரமான விதைகளே நல்ல விளைச்சலுக்கு ஆதாரம். எனவே, விவ சாயிகள் சாகுபடி செய்யப் படவுள்ள விதைக் குவியலில் இருந்து மாதிரிகளை 100 கிராம் எடுத்து துணிப்பையில் இட்டு விபரத்தாளில் பயிர் ரகம், குவியல் எண் போன்ற விபரங்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் விதைப் பரிசோதனை நிலைத்தில் 80 ரூபாய் வீதம் ஒரு மாதிரிக்கு செலுத்தி விதையின் தரத்தினை பரிசோதனை முடிவுகள் மூலம் அறியலாம். இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத் தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.தர்மபுரி மாவட்ட விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்ய வாங் கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவ சம் உள்ள விதைக ளையோ விதைப்பதற்கு முன் விதையின் தரம் அறிய இந்த முகவரிக்கு விதை மாதிரிகளை அனுப்பி பகுப்பாய்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story