ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 27 - 12 - 1965ம் ஆண்டு தனது தாய்மொழியின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் மொழியை ஆட்சிமொழி சட்டமாக இயற்றப்பட்டது. அதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம். கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசத்து மைதானம் முன்பு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை சுற்றுசூழல் துறை ஒருங்கிணைப்பாளர் தங்கமாரியப்பன், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் சதாசிவம், வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியின் நோக்கம் என்பது தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு வணிகர்கள் அனைவரும் தனது தாய்மொழியில் பெயர் பலகையை வைக்க வேண்டும் என்பதே ஆகும், மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழ், அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச் சொல் ஆக்குவோம், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தாயினுஞ் சிறந்ததே , தரணியிலுயர்ந்தது தமிழே, பிற மொழிகளை வாழவைத்து தன்னையும் காத்து நிற்கும் மொழி தமிழ்மொழி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ், மொழி என்றால் உயிரின் நரம்பு, முத்தமிழ்மொழியோ தமிழர் வரம்பு, உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி மாரியம்மன் கோவில் திடல், மெயின்பஜார், தெப்பம், நகராட்சி அலுவலகம் வழியாக வந்து எம்.ஜி.ஆர் சிலை அருகில் முடிவடைந்தது.