சிவகாசியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

சிவகாசியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

மாவட்ட ஆட்சியர் 

ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தினை முனைப்புடன் செயற்படுத்திடவும், திட்டச் செயலாக்கத்தில் காணும் இடர்பாடுகளைக் களைந்திடவும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டந்தோறும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு உத்தரவிட்டிருப்பதாகவும். விருதுநகர் மாவட்டத்தில், ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதி சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை ஏற்றுத் தொடங்கி வைக்க இருப்பதாகவும். தமிழ் வளர்ச்சி இயக்குநர் திட்டச் செயலாக்கம் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் பங்கேற்று, தமிழ் மொழியின் தொன்மை, ஆட்சிமொழிக்கான தகுதி, ஆட்சிமொழிச்சட்டம் வரலாறு செயற்பாடு, பிழையின்றி தமிழில் எழுதுதல், வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கலைச் சொல்லாக்கம் போன்ற தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.

இப்பயிலரங்கில் அரசு அலுவலர் /பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story