கனரக வாகனங்களை முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை

கனரக வாகனங்களை முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 
'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' கூட்டத்தில், சாலையோர வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, கனரக வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' கூட்டம் நேற்று நடந்தது.

ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு கூட்டத்தை, ஒரகடம் தொழிற்பூங்கா மேற்பார்வையாளர் தேவஇரக்கம் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, மின்வாரியம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

இதில், ஒரகடம் சிப்காட் பகுதியில் செயல்படும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் நிறுவனத்திற்கு தேவையான, மின் தேவை, குடிநீர், சாலை வசதி, பார்க்கிங் உள்ளிட்ட கோரிக்கைகளும், சிப்காட் சாலைகளில் மின்விளக்கு, சிசிடிவி அதிகரிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொழிற்சாலையின் மூலப்பெருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், அவ்வாறு வரும் கனரக வாகனங்கள் வடக்குப்பட்டு, வைப்பூர், மேட்டுப்பாலயம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்த முனையத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story