விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் விக்கிரவாண்டி காணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் தோட்டக்கலைத்துறை சார்ந்த கேள்வி எழுப்பும் பொழுது அதற்கு பதில் அளிக்க தோட்டக்கலைத் துறை சார்ந்த அதிகாரிகள் இல்லை என்பதால் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆண்டின் இறுதி பகுதியான கடைசி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கூட அதிகாரிகள் யாரும் பங்கேற்க வெள்ளையான புலம்பினர்.
மேலும் நீர் நிலைகளில் உள்ள முள் செடிகளை அகற்ற பலமுறை பல்வேறு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் தற்போது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதே நிலை நீடித்தால் அடுத்த முறை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திலும் அதன் கோட்ட அளவிலான உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும், ஆனால் அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை அலட்சியமாக கருத்தில் எடுத்துக் கொண்டு கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து வருவதால் விவசாயிகள் அமைதி அடைந்து புலம்பி வருகின்றனர்.