கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

 செய்யூர் அருகே ஏரியின் நீரோட்டம் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

செய்யூர் அருகே ஏரியின் நீரோட்டம் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்புநீர் ஏரி உள்ளது. இந்த ஏரி, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - சி.ஆர்.இசட்.,ன் கீழ் உள்ளது. செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர், இந்த ஓதியூர் ஏரி வழியாக கடலில் கடக்கிறது.

மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, 1,270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. அதில், ஓதியூர் ஏரி நடுவே, 400 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், கடல் சீற்றம் காரணமாக, ஓதியூர் ஏரியில் நீரோட்டம் அதிக அளவில் இருக்கும்.

ஓதியூர் ஏரி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் -- சி.ஆர்.இ.,ன் கீழ் உள்ளதால், ஏரியின் நீரோட்டம் பாதிக்காத வகையில், கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறாதா என, சுற்றுச்சூழல், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story