பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாடாலூர் அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோவில்.

அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து வான்வழியாக தூக்கிகொண்டு செல்லும் போது, அம்மலையில் இருந்து பெயர்ந்து விழுந்த சிறு குன்றே இங்கு பூமலை என அழைக்கப்படுகிறது என்று கூறுவர்.

மேலும், மலை மீது ஏறி தன்னை வணங்க முடியாத பக்தர்களுக்கு தானே இறங்கி வந்து வழித்துணை ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பூமலை சஞ்சீவிராயருக்கு புரட்டாசி சனிக்கிழமை | உற்சவமும்,வழித்துணை ஆஞ்சநேயருக்கு அனுமன்ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். இச்சிறப்பு வாய்ந்த தலத்தில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் திருக்கோயில் 1850 அடிகள் கொண்ட மலை பாதை, மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு சட்டமன்ற அறிவிப்பில் சேர்க்கும் நோக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருச்சி இணை ஆணையர் பிரகாஷ்,செயற்பொறியாளர் மோகன், உதவிகோட்ட பொறியாளர் அழகுமணி. உதவிகோட்டப்பொறியாளர் (மின்சாரம்)விஜயகுமார்,

தொல்லியல்துறை வல்லுனர் சேரன்,செயல் அலுவலர் ஹேமாவதி.உதவிஸ்பதி வெங்கடேஷ். ஆலத்தூர் ஆய்வாளர் சுமதி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story