கடைகள், உணவு நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

கடைகள், உணவு நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

  சேலத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்களில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

சேலத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்களில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்துதொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் கடைகள், உணவு நிறுவனங்களில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள், கடைகள், செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த்துறை, போலீஸ் துறை கல்வித்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அமைப்பினர், தொழிலாளர் துறை அலுவலர்கள் நேற்று சேலம் தாதுபாய்குட்டை, கிச்சிப்பாளையம், கல்லாங்குத்து, அம்மாப்பேட்டை, மன்னார்பாளையம், அல்லிக்குட்டை, வீராணம், வலசையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவு நிறுவனங்கள், கடைகள், செங்கல் சூளைகள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நிறுவனங்கள், தறிப்பட்டறைகளில் திடீரென ஆய்வு செய்தனர். ரூ.50 ஆயிரம் அபராதம் அப்போது, குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவத்தினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்று நிறுவன நிர்வாகிகளிடம் தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக பணியமர்த்தும் உரிமையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story