தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்

தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், காலாவதியான மதுபானங்கள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, மதுபான பார்களை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினர்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் எந்தவித புகார்களுக்கும் இடமில்லாத வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வப்பாண்டியன் தலைமையில் அதிகாரிகள், டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள் என குழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் பற்றாக்குறையாக உள்ளதா?

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை முறையாக செயல்படுகிறதா, காலாவதியான மதுபானங்கள் உள்ளதா, மதுபான பார்கள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா, மதுபான பார் உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முறையாக செலுத்தி வருகிறார்களா என்பன குறித்து கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் 136 டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வின்போது, பார்கள் சுத்தம் இல்லாமலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் இருந்தால், குறைகளை சரி செய்யவும், சுத்தமாக பராமரிக்கவும் பார் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story