வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு!
அதிகாரிகள் ஆய்வு
தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் உள்ள வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொதுபார்வையாளர் ரூபேஷ்குமார், வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அய்வு செய்தனர். அப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பகுதி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகள், கூடுதல் பாதுகாப்பு அறைகள், தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, தேர்தல் பார்வையாளர் அறை மற்றும் ஊடக மையம், வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலிகளை பார்வையிட்டனர். வாக்கு எந்திரங்களை வைக்கும் பாதுகாப்பு அறையில் உள்ள ஜன்னல்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story