ரூ.1½ கோடி மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
கம்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள் நகர் பகுதி விரிவடைந்து வருகிறது. இதனால் அதற்கு தகுந்தாற்போல் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய், சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நந்தகோபால்சாமி நகர் பகுதியில் ரூ.1 கோடியே 50 லட்சம் பெறப்பட்டு கழிவுநீர் கால்வாய், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகளை நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், ஆணையர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் அய்யனார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து நகராட்சி தலைவர் கூறுகையில், நந்தகோபால்சாமி நகர் பகுதியில் 2,840 மீட்டர் நீள கழிவுநீர் கால்வாய், 15 சிறுபாலங்கள் அமைப்பதற்காக 2022-23-ம் ஆண்டு மூலதனமாக ரூ.1 கோடியே 50 லட்சம் பெறப்பட்டது. பணிகள் தொடங்கிய பிறகு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 6 சிறுபாலங்கள், சாக்கடை செல்ல முடியாத பகுதியில் கூடுதலாக 301 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது. மேலும் அளவீட்டில் இல்லாத 2 பழைய பாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story