நத்தைகளால் தோட்டப்பயிர்கள் பாதிப்பு அதிகாரிகள் ஆய்வு

நத்தைகளால் தோட்டப்பயிர்கள் பாதிப்பு அதிகாரிகள் ஆய்வு
நத்தைகளால் தோட்டப்பயிர்கள் பாதிப்பு அதிகாரிகள் ஆய்வு
நத்தைகளால் தோட்டப்பயிர்கள் பாதிப்படைந்ததை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில், 150 ஏக்கர் பரப்பளவில், நெல், வாழை, கத்தரி, மிளகாய், வெண்டை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சில மாதங்களாக, தங்களின் விளை நிலங்களில், அதிகாலை நேரங்களில் நத்தைகள் அதிக அளவில் செல்வதால், மிளகாய், வெண்டை உள்ளிட்ட செடிகளில் பாதிப்பு ஏற்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, புதிதாக நடவு செய்யப்பட்ட மிளகாய், வெண்டை, கத்தரிச் செடிகளில் பாதிப்பு ஏற்பட்டு, அந்த செடிகள் அழிந்து விடுவதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: திம்மாவரம் மற்றும் ஆத்துார் கிராமங்களில், விளைநிலங்களை ஆய்வு செய்ததில், சில இடங்களில் நத்தைகளின் பாதிப்பு உள்ளது. விளைநிலங்களில் வரும் நத்தைகளை கட்டுப்படுத்த, விளைநிலங்களைச் சுற்றி சாமந்தி செடிகளை பொறி பயிராக வளர்க்கலாம். நிலங்களை சுற்றி சுண்ணாம்பு மற்றும் 'பிளீச்சிங் பவுடர்' உப்பு உள்ளிட்டவற்றை துாவலாம். ஈரமான சாக்குப் பைகள், பப்பாளி இலைகளை பொறியாக பயன்படுத்தி, நத்தைகளை அழிக்க முடியும்.

நத்தைகளின் பாதையை மறைக்க, அரிசி தவிடு மற்றும் மெட்டல்டிஹைடு கலவையை பரப்பி, பாதிக்கப்பட்ட செடிகளை சுற்றி துகள்களாக தெளிப்பதன் மூலம், நத்தையை கட்டுப்படுத்த முடியும். இவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி வருகிறோம்.

Tags

Next Story