அரசியல் காழ்புணர்சியோடு அதிகாரிகள் இடையூறு -எஸ்.பி வேலுமணி
ஆட்சியரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ க்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்தனர்.தொகுதிவாரியாக உள்ளி பிரச்சனைகள் தீர்வு காண்பதும், சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் நடைபெறவில்லை எனவும் அதிமுக ஆட்சியில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தவர் சிறுவாணி தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.கனிமவளம் கொள்ளை அதிகமாக நடந்து வருவதாக கூறியவர் ஊருக்குள் வனவிலங்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழிகளாகவும் உள்ளதாகவும் அதை சீரமைக்க வேண்டும் எனவும் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து அத்திக்கடவு அவிநாசி திட்டம் II செயல்படுத்தப்பட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.கோவை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள் வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருவதாகவும் குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு குற்றச்சாட்டு குறிப்பானைகளை வழங்கி Section 205யை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்களை பறிப்பதாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்போது தெரிவித்தார்.