நெல்லை அருகே அதிகாரிகள் பேச்சுவார்த்தை: சாலைமறியல்
மறியலில் ஈடுபட்ட மக்கள்
நெல்லை அருகே எஸ்டிபிஐ கட்சியினரிடம் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து தென்கலம் சாலையில் புதிதாக அமைக்கப்படும் சிமெண்ட் சாலையின் குறுக்கே முறையான கழிவு நீர் ஓடை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags
Next Story