உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அதிகாரிகள் அஞ்சலி

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அதிகாரிகள் அஞ்சலி

அரசு மரியாதை 

மேட்டூரில் உடல் உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மேட்டூர் அருகே மேச்சேரி கோவில் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணன், ஜெயா, தம்பதியினரின் மகன் நாகராஜ் (19) ஓசூரில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். நாகராஜ் கடந்த வெள்ளி கிழமை அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் நாகராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நாகராஜ் இன்று உயிரிழந்தார். இதனை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் நாகராஜ் கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

பின்னர் அவரது உடல் சொந்த கிராமமான மேச்சேரி கோவில் வெள்ளாறு பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எம்.எல்.ஏ, சதாசிவம்,மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, தாசில்தார் விஜி, காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நேரில் சென்று நாகராஜன் உடனுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story