குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு - ஒருவர் மீட்பு!

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு - ஒருவர் மீட்பு!

அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில் ஒருவர் மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு ஒருவர் மீட்பு திருப்பூர், ஜூன். 8: திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் வகையில் நேற்று திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் புகழேந்தி ஆகியோர்கள் தலைமையில், மாவட்டம் முழுவதும் உள்பட கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள், கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஒரு குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து திருப்பூரில் நிறுவனத்தில் வேலை செய்த குழந்தை தொழிலாளரை மீட்டனர். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் எவ்வித தொழில்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துதல் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியமர்த்துதல் குற்றம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவ்வாறு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20,000 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story