அதிகாரிகள் அதிரடி சோதனை - 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதத்தில் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை கடுமையாக பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மூன்று குடோன்களில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் சுகாதார அதிகாரி ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் கவர், கப்பு மற்றும் தட்டு போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் அந்த பொருட்களை நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் டெம்போவில் ஏற்றி சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் குடோன்களுக்கு 11,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது