சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி சுற்றுச்சுவரை அகற்றிய அதிகாரிகள்

சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி சுற்றுச்சுவரை அகற்றிய அதிகாரிகள்
 மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட நபருக்காக சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி சுற்றுச்சுவரை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு உண்டானது.
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட நபருக்காக சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி சுற்றுச்சுவரை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு உண்டானது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில் முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் ஜெயந்தி லால். இவருக்கு சொந்தமான வீட்டு முன்பு உள்ள இடத்தில் கார் செட் அமைத்து கார் நிறுத்திருந்தார். மேலும் அவரது வீட்டின் அருகே சுற்றுசுவர் அமைத்திருந்தார்.அந்த சுற்று சுவர் நகராட்சிக்கு சொந்தமானது சாலையின் இடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது என வீட்டின் உரிமைக்காரருக்கு எந்தவித முன் அறிவிப்பு நோட்டீஸும் கொடுக்காமல் திடீரென நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வந்து இடிக்க முற்பட்டனர்.

அப்பொழுது,வீட்டு மனையின் உரிமையாளரின் மேலாளர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அந்தத் தெரு மக்கள் மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் ( பொறுப்பு) விஜயகுமாரிடம் மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை குடிநீர் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் இப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் எங்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேட்பதற்கு வராத அரசு அதிகாரிகள் பக்கத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்த நபரின் சொந்தமான இடத்திற்கு வழிவகை செய்வதற்காக எங்கள் பகுதியில் வந்து உள்ளீர்களா என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரியிடம் சரம் மாதிரியாக கேள்வியை எழுப்பினர் இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மதுராந்தகம் நகராட்சி கூடுதல் ஆணையாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திகைத்து நின்றனர்.

இதனை தொடர்ந்து நகராட்சியின் நகர்ப்புற கட்டமைப்பு வசதியின் கீழ் உள்ளது என அதற்கான வரைபடத்தை காட்டாமல் 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தத் தெருவில் வசிக்கின்ற பொதுமக்கள் மதுராந்தகம் நகராட்சியின் சார்பில் சாலை வசதி செய்து தரப்படவில்லை, கழிவுநீர் கால்வாயில் கழி நீர் வெளியேற வழி இல்லை.மழை நேரத்தில் வெள்ள நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கவில்லை எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராததை சுட்டிக்காட்டி அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பதில் ஏதும் கூறாமல் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) விஜயகுமார்,இனிமேதான் செய்து தருவோம் என மழுப்பலான பதில் கூறினார். அதன் பின்னர், ஜெயந்திலாலுக்கு சொந்தமான மனைப்பிரிவில் இருந்த சுற்று சுவரை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினார்.இதற்கு அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சுவரை இடித்து விட்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story