கோடை பருவ பயிர் சாகுபடி குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோடை பருவ பயிர் சாகுபடி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

வெள்ளாளப்பட்டி பகுதியில், கோடை பருவ பயிர் சாகுபடி குறித்து வேளாண்மை துணை இயக்குனர் களஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி வட்டாரத்தில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை பருவ பயிர் சாகுபடி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோடைகால சிறப்பு பயிராக நிலக்கடலைஎஸ் உளுத்து மற்றும் பச்சைப் பயறு ஆகிய பயிர்களை பயிரிட விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்மை துணை இயக்குனர் அ.கோப்பெருந்தேவி பயறு மற்றும் எண்ணெய் வித்து சென்னை அவர்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கோடை பருவ பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் எள் வயல் மற்றும் கம்பு வயல் ஆகியவை அளே தர்மபுரி கிராமத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கோடை உழவு செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

மேலும் இயற்கை விவசாயியான கருணாநிதி வெள்ளாளப்பட்டி அவர்களின் தோட்டத்தை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்தனர் மேலும் இந்த ஆய்வின் போது பல தானிய பயிர் சாகுபடி குறித்து ஆய்வுசெய்யப்பட்டது விஸ்வநாதன் ஆய்வு மக்காச்சோளம் ,கம்பு நிலக்கடலை கோதுமை கொத்தமல்லி கடுகு, கொள்ளு,கொளிஞ்சி,உளுந்து, கொண்டைகடலை, Quming பலவகை தானியங்களை ஒன்றாக விதைத்து அதன் மூலம் தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து ஆகிய அனைத்து சத்துக்களும் மண்ணிற்கு கிடைப்பதற்காக இந்த முறையை பயன்படுத்துகிறார்.

இதனால் மண் வளம் பெற்று எந்த பயிரிட்டாலும் சிறப்பான வகையில் வளகும் இந்த முறையினை பசும்தாள் உரம் விடுதல் என்று கூறப்படுகிறது. மேலும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மதிக்கோண்பாளையத்தில் ராகி கொள்முதல் நிலைய செயல்பாடுகள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்டம் முழுவதும் கோடை பருவத்தில் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து விதமான வேளாண் இருப்பு பொருட்களையும் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மைய பெற்று பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story