தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை  செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பெரம்பலூர் நகரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சீல்வைத்த, உணவு பாதுகாப்புத் துறையினர்

பெரம்பலூர் நகரில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கதிரவன். ரவி. சின்னமுத்து ஆகியோர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார், உத்தரவின் பேரில், நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மற்றும் எளம்பலூர் ஊராட்சி பல்வேறு இடங்களில், பெரம்பலூர் சரக மாவட்ட துணை காவால் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசாருடன் ஆய்வு மேற்க்கொண்டனர்.

இதில், பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பிரபாகரன் என்பவர் பெட்டிக்கடையில் வைத்திருந்த 22 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும், எளம்பலூர் பகுதியில் ஆய்வு செய்தபோது இளங்கோவன் என்பவரது பெட்டிக்கடையிலும் விற்பனை செய்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால், கடை உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story