எட்டு கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சீல் வைக்கப்பட்ட கடைகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராப் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது .இதனை அடுத்து குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் போலீசார் மளிகை கடைகள் பீடா கடைகள் மற்றும் டீக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பள்ளிபாளையம் காகித ஆலை சாலையில் உள்ள பெட்டிகடைகள், கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை இட்ட பொழுது ,அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து எட்டு கடைகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், கடைகளை பூட்டி சீல் வைத்தனர் .மேலும் கடையின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர் ...