ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து அலுவலர்கள் தர்ணா

ஒரத்தநாட்டில் ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து அலுவலர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

ஒரத்தநாட்டில் ஒன்றியக் குழு தலைவரை கண் டித்து அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.-வை சேர்ந்த பார்வதி சிவசங்கர் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில் ஒன்றிய பொது நிதியின் செலவில் அலுவலகத்திற்கு இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அமர்ந்து பணி செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஒன்றியக் குழு தலைவர் பார்வதி சிவசங்கர், தனது அலுவலக உதவியாளர் ஒருவர் மூலம் பொது நிதியில் வாங்கி போடப்பட்டுள்ள இருக்கைகளை கைப்பற்றி அவற்றை தனியாக ஒரு இடத்தில் வைத்ததாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து ஒன்றிய அலுவலர்கள் அலுவலகத்தின் முகப்பில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட உயர் அதிகாரிகள் அலுவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். இதைத் தொடர்ந்து அலுவலர்கள் அலுவலகத்திற்குள் சென்று வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் அங்கு விரைந்து சென்ற தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story