மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு - ஆட்சியர் அறிவிப்பு
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், மத்திய அரசின் திட்டங்களான தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) SBM(G) மற்றும் ஜல் சக்தி அபியான்( JJM) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து வரும் 17.02.24 வரை களஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் Mr.HASNUDDIN PATHAN மற்றும் Dr.SKKULSHRESTHA, National Wash Expert(NWE) அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு தொடர்பாக அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில், தேர்வு செய்யப்பட்ட 16 ஊராட்சிகளில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திட, திரவக்கழிவு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை தக்க வைத்தல் தொடர்பாகவும், ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து ஊரக பகுதிகளில் உள்ள தனிநபர் இல்ல குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது குறித்தும், தரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? எனவும் பொதுமக்களிடம் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story