தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வாங்க வாங்க -உயரதிகாரிகள் டென்ஷன்
பயிற்சி வகுப்பு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு சீர்காழியில் தனியார் பள்ளியில் 1294 அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பயிற்சி வகுப்பை பல ஆசிரியர்கள் சிறிதும் மதிக்காமல் பள்ளி வளாகம், மற்றும் பள்ளிக்கு வெளியே என அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். இது குறித்து ஒலி பெருக்கி மூலம் சீர்காழி வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவரும் உள்ளே வந்து அமருங்கள் என்று பலமுறை கூறியும் யாரும் அதைபொருட்படுத்த வில்லை, ஒரு கட்டத்தில் கடுப்பான மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் மற்றும் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பயிற்சி மையத்திற்கு வெளியில் நின்றவர்களை ஒருவர்,ஒருவராக சத்தம் இட்டு பயிற்சியில் கலந்துகொள்ள செய்தனர்.
இதுகுறித்து சில அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற பயிற்சி வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு பின்னர் தேர்தல் நடைபெறும் போது வாக்குசாவடி மையங்களில் ஏற்படும் சிறு சிறு சந்தேகங்களுக்கும் என் செய்வது என்று தெரியாமல் இது போன்ற பொறுப்பற்ற அலுவலர்களால் தான் பல மையங்களில் வாக்குபதிவில் தொடங்குவது முதல் முடிவது வரை பல குளறுபடி நடைபெறுகிறது என வேதனை தெரிவித்தனர்.