வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் முதியோர் இல்லம்

வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் முதியோர் இல்லம்

போளூர் அடுத்த வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் லயன்ஸ் சங்கம் முதியோர் இல்லம் அமைக்கிறது

போளூர் அடுத்த வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் லயன்ஸ் சங்கம் முதியோர் இல்லம் அமைக்கிறது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் முதியோர் இல்லம் அமைப்பதற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆளுநர் லயன். எஸ். மதியழகன் உள்ளிட்ட லயன்ஸ் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். லயன்ஸ் மாவட்ட ஆளுநரின் கனவு திட்டமான முதியோர் இல்லம் அமைத்தல் என்ற திட்டத்திற்கு துணை ஆளுநர் அன்பரசு மாவட்ட லயன்ஸ் சங்கத்திற்கு கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி நட்சத்திரக்கோவிலில் தனது ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார். அந்த இடத்தில் முதியோர் இல்லம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆளுநர் லயன். எஸ். மதியழகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அனைவரையும் முதல் துணை ஆளுநர் அன்பரசு மற்றும் டாக்டர். சுகந்தி அன்பரசு ஆகியோர் வரவேற்றனர்.

Tags

Next Story