மழையால் பழமையான கட்டிடம் சேதம்

மழையால் பழமையான கட்டிடம் சேதம்
X

இடிந்து விழுந்த வீடு 

திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பிச்சை முகைதீன் சந்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தரைதளத்தில் வீட்டிற்கு சொந்தக்காரரான கண்ணன் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், முதல் தளத்தில் மற்றொரு குடும்பத்தினர் வாடகைக்கும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, பழமையான கட்டிடத்தில் முன் பகுதி தண்ணீரில் ஊறி சேதம் அடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று பிற்பகல் நேரத்தில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.இந்த விபத்தின் போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story