நித்திரவிளை அருகே மூதாட்டி கீழே தள்ளி செயின் பறிப்பு 

நித்திரவிளை அருகே மூதாட்டி கீழே தள்ளி செயின் பறிப்பு 

நித்திரவிளை அருகே மூதாட்டி கீழே தள்ளி செயின் பறிப்பு

நித்திரவிளை அருகே மூதாட்டி கீழே தள்ளி செயின் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளைஅருகே பழைய காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் வியாகுலம்மா (75). நேற்று இரவு சுமார் 11. 15 மணியளவில் சின்னத்துறை பகுதியில் உள்ள கிறிஸ்தவ குருசடி திருவிழாவிற்கு சென்று விட்டு தனது பேத்தி பைக்கில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இவரது வீட்டுக்கு திரும்பும் சந்தில் இரண்டு வாலிபர்கள் நின்றுள்ளனர். அதை பொருட்படுத்தாமல் பாட்டியை வீட்டு முன்னால் இறக்கிவிட்டு தனது தாயாரை அழைத்து வர பேத்தி சென்றுள்ளார். இதனிடையே அந்த பகுதியில் நின்ற இரண்டு வாலிபர்களும் பைக்கில் சென்று வியாகுலம்மாவை பிடித்து கீழே தள்ளி போட்டு கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து பேத்தியுடன் வந்த மகள், தாயார் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து விசாரிக்கவே செயின் திருட்டுப் போனதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்து குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story