சம்பளத்திற்காக காத்திருக்கும் மூதாட்டி; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

சம்பளத்திற்காக காத்திருக்கும் மூதாட்டி;  கண்டு கொள்ளாத அதிகாரிகள்

காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு சம்பளத்திற்காக காத்து கிடந்த மூதாட்டியை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு சம்பளத்திற்காக காத்து கிடந்த மூதாட்டியை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இடையர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி மீனாள் (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி சார்பில் செயல்படும் படிப்பகத்தில் 40 வருடங்களாக பணிபுரிந்து வருவதாகவும், இவருக்கு மாதம் ரூபாய் 500 சம்பளத்தில் படிப்பகத்தை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் தினசரி நாளிதழ்களை சேகரித்து நகராட்சியில் ஒப்படைக்கும் பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால் பலமுறை வந்து நகராட்சி அதிகாரியிடம் முறையிட்டும் சம்பளம் வழங்கவில்லை. இந்த தள்ளதாக வயதில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது 500 ரூபாய் சம்பளத்தை பெற மூதாட்டி நகராட்சி வாயிலில் காத்துக் கிடக்கும் நிலையில் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story