குட்கா கடத்திய முதியவர் கைது
முதியவர் கைது
திருத்தணியில் குட்கா கடத்திய முதியவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து திருத்தணி பகுதிகளுக்கு, குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவின்படி, திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, நகர் பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி, சோதனை செய்ததில், 7 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, 65, என, தெரிய வந்தது. தொடர்ந்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராமமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Next Story