திருவரம்பூர் அருகே முதியவர் தற்கொலை

திருவரம்பூர் அருகே முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை 

உடல் நல கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த வாலமன் தான் கோட்டை முல்லை வாசல் தெரு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (60) வயது முதிர்வு மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாரிமுத்துவின் மகன் ரமேஷ் துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிமுத்துவின் உடல் துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story